என் வலைப்பூவை வாசிக்க வந்த உங்களை வரவேற்கிறேன்.

Sunday, November 8, 2009

'முடிந்த பொழுது....'


மிச்சம்

வீட்டை பாகம் போட்டு
பிரித்துக் கொடுத்தவருக்கு
கடைசியில் கிடைத்தது
வீட்டுத் திண்ணையில் வாசம்.

<><><><><><><><><><><><><><><><><><><><>

நீக்கமற

கோவிலில் பார்த்தேன்
கடையில் பார்த்தேன்
வீட்டினுள் பார்த்தேன்
சாம்பிராணி புகை.
<><><><><><><><><><><><><><><><><><><><>

'முடிந்த பொழுது....'

ப்பா சொன்னார்.
அம்மா சொன்னாள்.
அக்கா தங்கச்சிகளும்:
' இப்போவாச்சும்
பண்ணிக்கோயேன்! '
நான் சொன்னேன்:
எல்லார் கல்யாணத்தையும்
பண்ணி வச்ச எனக்கு
நானும் பண்ணிண்ட மாதிரி
ஒரு திருப்தி.
இப்படியே இருந்துடறேனே
இனியுள்ள நாட்களும்!

--ரேகா ராகவன்.

நமது காலுக்கடியில் பாறை எது? மணல் எது என்பதை உணர்த்துபவை பிரச்சினைகள்.

<><><><><><><><><><><><><><><><><><><><><>

5 comments:

  1. உங்கள் பார்வை விசாலமானது! அது நல்ல கவிதையானது. கே.பி.ஜனா

    ReplyDelete
  2. "Mudintha pozhuthu"

    "Appadi Erundhirundhal Ini Varum Natkal Inippaga Irundhirukkumoe?!!
    Padaithavanea Arivaar!!

    Mandaveli Natarajan.

    ReplyDelete
  3. முதல் கவிதை பகீர் நெகிழ்ச்சி மற்றும் நிதர்சனம்...

    நல்லா இருக்கு சார்....

    ReplyDelete

" உங்கள் கருத்துக்களை தெரிவிங்களேன் "