என் வலைப்பூவை வாசிக்க வந்த உங்களை வரவேற்கிறேன்.

Thursday, December 29, 2011

தனக்குத் தானே...




'தானேப் புயல் தானே வருமா
இடி மின்னல்களுக்குப்
பின்தானே வருமா?'
என் கேள்விக்கு
'சாமிக்குத் தான் தெரியும்
நான் வெறும் ஆசாமி
எனக்கென்னத் தெரியும்?' என
வானத்தைக் காட்டி
வறுமையிலும்
வார்த்தை விளையாட்டு ஆடும்
அந்த முதியவரிடம்...

"வீட்டுக் கூரையைக் கூட
பிய்த்துக்கொண்டு  போகுமாமே, 
தெரியுமா அதுவாவது பெரியவரே?"
என் அடுத்த கேள்விக்கு
'கூரை  இருந்தால்தானே
பிய்த்துக்கொண்டு போவதற்கு?
வானமே கூரை எங்களுக்கு
பிளாட்பாரமே பஞ்சு மெத்தை
இருக்கிற கொஞ்ச காலத்தை
இப்படியே கழித்துப் போய்விட்டால்
எனக்கும் நல்லது,
பிறருக்கும் ஏனெனில்
அவர்களின் இருப்பிடத்தில்
பங்கு கேட்கமாட்டேன் பாரு!'!
கூறிய பொக்கைவாய்க் 
கிழவரிடம் இன்னும்
நிறைய இருக்கும்
நாம்  கற்றுக்கொள்ள!


0o0

9 comments:

  1. யதார்த்தம் ... மழைக்கு சூடா பதார்த்தம் ... (ஐ .. ஐ ... எனக்கும் கவிதை வருதே...) :) தமிழில் வார்த்தை இல்லாததால் .. superb...

    ReplyDelete
  2. மிக நல்ல கருத்துள்ள கவிதை...

    கற்றுக்கொள்ள எத்தனை இருக்கிறது அடுத்தவர்களிடமிருந்து!

    ReplyDelete
  3. கிழவரிடம் இன்னும்
    நிறைய இருக்கும்
    நாம் கற்றுக்கொள்ள!.


    உண்மைதான்..

    ReplyDelete
  4. முதுமையின் முதிர்ச்சியான மன நிலையை அழகிய கவியாக்கித்
    தந்துள்ளீர்கள்.சொல்லிச் சென்ற விதம் அருமை
    மனம் கவர்ந்த பதிவு
    தொடர வாழ்த்துக்கள்
    தங்களுக்கும் தங்கள் குடும்பத்தாருக்கும்
    இனிய புத்தாண்டு நல் வாழ்த்துக்கள்
    த.ம 3

    ReplyDelete
  5. வானமே கூரை எங்களுக்கு
    பிளாட்பாரமே பஞ்சு மெத்தை

    தானே வந்த கவிதையில் நனைந்தேன் நானும்.

    ReplyDelete
  6. நல்ல கவிதை. எல்லாரிடமிருந்தும் நாம் கற்றுக்கொள்ள நிறைய விஷயங்கள் கொட்டிக்கிடக்குது.

    ReplyDelete
  7. முதுமையிலே இனிமை காண முடியுமா? என்றால் முடியும் என்றார் கிழவர்!

    வாழ்த்துக்களுடன்,

    ஆர்.ஆர்.ஆர்.

    ReplyDelete
  8. ரேகா, தானே புயலுக்கு முன்பே தானாக உதித்த கவிதையா ?
    இனிமை உள்ளது. - சந்திரஹரி

    ReplyDelete

" உங்கள் கருத்துக்களை தெரிவிங்களேன் "